Categories: கல்வி

டிப்ளமோ படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை வாய்புகள் அறிவிப்பு!!

வெளியிட்டது
டிப்ளமோ படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை வாய்புகள் அறிவிப்பு!! 1

தொழிற்பழகுநர் பயிற்சி மேற்கொள்வதற்கான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு டிப்ளமோ தகுதி இருந்தால் போதும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காற்றாலை நிறுவனத்தில் வேலை! விண்ணப்பதாரர்கள் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சைன்ஸ் ஆகியவற்றில் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2017, 2018, 2019 ஆகிய வருடங்களில் இந்த படிப்பு படித்து தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

மேற்கண்ட துறையில் பி.இ, டிப்ளமோ படித்தவர்கள் ஒரு வருட சம்பளத்துடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழக மின்வாரியத்தில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் வரவுள்ளது. ஆகையால், விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சியை எடுத்துக்கொண்டால், ஒரு வேளை கூடுதல் தகுதியாக எடுத்து கொள்ளப்படும்.தற்போது உள்ள போட்டி உலகில் எதேனும் ஒரு கூடுதல் தகுதி தேவையாக உள்ளது. எனவே அரசு ஏற்படுத்தும் இந்த வாய்ப்பினை பயன்படுத்துவது மூலம் வேலைவாய்ப்புகளை எளிதில் பெரும் நிலை உருவாகலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் நவம்பர் 5ம் தேதிக்குள் www.mhrdnats.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு www.boat-srp.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்