
ரஜினிகாந்த் நடிப்பில் எடுக்க படும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. பாண்டியன், மூன்று முகம் ஆகிய படங்களைப் போன்று இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படடப்பிடிப்பு மும்பையைச் சுற்றிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து 6 மணிக்கு ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், ரஜினிகாந்த் கருப்பு நிற பனியனில், கோபத்துடன் கம்பியைப் பிடித்து உடற்பயிற்சி செய்வது போல ஒரு போஸ்டர் இடம் பெற்றுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.`
இந்த போஸ்டரைக் வைத்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், 69 வயதாகும் நிலையில் ரஜினியின் உண்மையான வெறித்தனம் இது. தர்பார் படத்தின் மூலம் படையப்பா திரும்ப வந்துவிட்டார். ரஜினியின் கடின உழைப்பு இந்த போஸ்டரில் தெரிகிறது. இளம் நடிகர் கூட இப்படி செய்யமாட்டார். இப்போது, இந்த வயதிலும் ரஜினிகாந்த் செய்கிறார், என்று பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இப்படம் 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி திரைக்கு வருகிறது.