Categories: அரசியல்

தமிழக இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல, புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் இராதாமணி வெற்றிபெற்றார். இவர் ஜனவரி மாதம் உடல்நல குறைவால் மரணமடைந்தார். அதேபோல, நான்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். ஆனால் இவரும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டதால், தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக இடைத்தேர்தல் அறிவிப்பு 1
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின்

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நான்குநேரி தொகுதியை திமுகவின் கூட்டணியாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இதுதேர்தலுக்கு விருப்பமனுக்களை அளிக்குமாறு திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகள் தெரிவித்துள்ளன. இரு கட்சிகளும் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளன.

நாளை மறுநாள் (செப்.23) முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருமெனவும், செப்டம்பர் 30ஆம் தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் எனவும், அக்டோபர் 3ஆம் தேதி தான் வேட்மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்