திருப்பதியில் தங்க கருட சேவை வீதி உலா!!

வெளியிட்டது
திருப்பதியில் தங்க கருட சேவை வீதி உலா!! 1

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பிரம்மோற்சவத்தில் பிரசித்தி பெற்ற கருட சேவை நடைபெற்றதுஅதனைக் காணவும் பெருமாளை தரிசிக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபொற்று வருகிறது. விழாவின் 5-வது நாளான இன்று காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை மோகினி அலங்காரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா நடந்தது. அதில், உற்சவரான மலையப்பசாமி உபயநாச்சியார்களுடன், எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது. 

தங்க கருட வாகனத்தில் வரும் பெருமாளை தரிசித்தால் மறுபிறவி கிடையாது, புண்ணியம் சேரும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் கோவிந்தா என்று முழக்கமிட்டு தரிசித்தனர். மகாவிஷ்ணுவின் திருநாமங்களையும் கூறி தரிசனம் செய்தனர். பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தங்க, வைர, பச்சை,மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

பல மாநிலங்களை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடி சென்றனர்.ஆண், பெண் பக்தர்கள் மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், கருடன், காளி லட்சுமி, பத்மாவதி தாயார், நரசிம்மர் உள்பட பல்வேறு சாமி வேடமிட்டு ஊர்வலமாகச் சென்றனர். கோலாட்டம், குதிரை ஆட்டம், மயிலாட்டம், நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், நடனம், பொய்க்கால் ஆகியவை நடந்தது. வீதிகளில் இருப்போரை தவிர பிற இடங்களில் திரண்டு இருந்த பக்தர்களும் தரிசிக்கும் வகையில், ஆங்காங்கே பிரமாண்டமான தொலைக்காட்சிகளை வைத்து, கருடசேவை நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. 

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்