Categories: சினிமா

திரைபட சங்கத்திற்கு புதிய விதி விதித்த அரசு! இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்!!

வெளியிட்டது
திரைபட சங்கத்திற்கு புதிய விதி விதித்த அரசு! இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்!! 1

ஊரடங்கு தளர்வு பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்த நிலையில் தற்போது சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மராட்டிய அரசு அதீத கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டிய நிலையில் அனுமதி அளித்துள்ளது.

அவற்றில் சமூக இடைவெளி, குறைந்த அளவிலான கலைஞர்கள் கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டும், தூய்மையை கடைப்பிடிப்பது என்றெல்லாம் நிபந்தனை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 65 வயதை எட்டிய நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது. படப்பிடிப்பில் யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு டாக்டரும் நர்சும் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து இந்திய திரைப்பட தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் கூறுகையில், வயதான நடிகர்கள், இயக்குனர்கள் கலைஞர்கள் இல்லாமல் படப்பிடிப்பை நடத்துவது சாத்தியம் இல்லை என்று அறிவித்துள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்