மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 59 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐபிஎல் தொடர் முடியும் தருவாயில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாக போராடி வருகின்றன. முக்கிய அணிகளான சென்னையும், மும்பையும் இந்த ஆண்டு பிளே போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வரும் இந்த தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் மூத்த வீரர்களை விட இளம் வீரர்கள் இந்த தொடரில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்கள் அணியின் வெற்றிக்கு பங்களித்து வருகின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் வெளிச்சம் போட்டு வரும் இளம் வீரர்களை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட இளம் நட்சத்திரம் திலக் வர்மாவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
திலக் வர்மா குறித்து இர்பான் பதான் கூறுகையில், “ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்படும் போது, அணிக்கு நல்ல மனநிலையை அளித்து, அந்த இளம் வீரருக்கு தன்னம்பிக்கை அளிக்கிறார். பேட்ஸ்மேன், கிரிக்கெட்டில் அவரது மதிப்பு தங்கம், அனைத்து அணிகளும் அவர் வேண்டும் என்று நினைக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்களை எளிதில் கையாளக்கூடிய இடது கை பேட்ஸ்மேன்களை இயல்பாக சமாளிக்கும் கோணம் அவர்களுக்கு இருப்பதால், இந்த இளம் ஹீரோ, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிச்சயம் ஒரு சிறந்த சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் இவர் தான் மும்பை அணியின் முக்கிய வீரராக திகழ்வர் எனவும் இர்பான் பதன் கூறியுள்ளார்.