தோனியே ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பார்!

வெளியிட்டது
தோனியே ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பார்! 1

ஐ.பி.எல். சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ். கே) அணியின் உரிமையாளரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முன்னாள் தலைவருமான என். ஸ்ரீனிவாசன் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார் என்று இன்று கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் கிரிக்கெட் சங்க சார்பில் எஸ்.என்.ஆர் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதன் சிறப்பு விருந்தினராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முன்னாள் என். ஸ்ரீனிவாசன் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் அக்கல்லூரியின் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி அவர்கள் தொடர்ந்து நீடிப்பார் என்று பேட்டியில் கூறியுள்ளார். இந்த செய்தி இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியாகும்.

மேலும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவையில் அடுத்த ஆண்டு கட்டாயமாக டிஎன்பிஎல் என்று கூறப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் கோவை மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்