Categories: சினிமா

நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்லி விருது “..!

வெளியிட்டது
நடிகர் ரஜினிகாந்துக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்லி விருது "..! 1

கோவாவில் நடைபெறவுள்ள 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கெளரவிக்கும் விதமாக அவருக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்லி ஆஃப் ஐப்பா 2019 விருதை வழங்கப் போவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்த மாதம் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. அதில் பல்வேறு நாடுகளில் இருந்து 250 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. அதன் பொன்விழா ஆண்டு விழாவில் சினிமாவில் பெண்களின் பங்களிப்பை ஏற்கும் வகையில் 50 பெண் திரைப்பட தயாரிப்பாளர்களால் 50 திரைப்படங்கள் திரையிடப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும்

அந்த விழாவின் 50வது வருடத்தைக் கொண்டாடும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்லி ஆஃப் ஐப்பா 2019 விருதை வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அவர்களுக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அமிதாப்பச்சன் அவர்களின் சுமார் 7 முதல் 8 படங்களையும் விழாவில் காண்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் பிரெஞ்ச் நடிகை இசபெல்லா ஹூபெர்ட்டுக்கு வெளிநாட்டு கலைஞர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும் ஜவடேகர் அவர்கள் டுவிட்டரில் கூூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனக்கு அறிவிக்கப்படும் விருதுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்