Categories: அரசியல்

நதி நீரை நிறுத்தினால் இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான்

வெளியிட்டது
நதி நீரை நிறுத்தினால் இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் 1

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே ஓடும் நதி நீரை இந்தியா திசை திருப்ப முயற்சி செய்தால் அது “ஆக்கிரமிப்பு செயல்” ஆக கருதப்படும் என்றும் இந்தியாவிற்குத் தக்க பதிலடி கொடுக்கவும் தங்களுக்கு உரிமை உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 15ம் தேதியன்று ஹரியானாவில் சார்க்கி தாத்ரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்லும் நதி நீரை நிறுத்தப்போவதாகவும் அந்த நீர்நிலைகள் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்குச் சொந்தமானது என்றும் கூறியுள்ளார். 70வது ஆண்டுகளாக இந்தியாவின் நதி நீர் பாகிஸ்தானுக்குச் செல்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மக்களுக்காக நதி நீரை திருப்பி விடுவதாகவும் மக்களுக்காக தாம் போராவார் என்றும் மோடி அவர்கள் கூறினர்.

ஆதலால் இந்த நதி நீரை இந்தியா திசை திருப்ப முயற்சித்தாலோ அல்லது பாகிஸ்தானுக்கு வருவதைத் தடுத்தாலோ இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் அவர்கள் கூறியுள்ளார்.

“சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின்படி மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜூலம், செனாப் ஆகிய நதிகள் மீதும் பாகிஸ்தானுக்கு சிறப்பு  உரிமை  உள்ளது. அதனை இந்தியா திருப்ப முயற்சி செய்தால் அது ‘ஆக்கிரமிப்பு செயல்’ ஆக கருதப்படும். இதனால் இந்தியாவிற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் “

என்று முகமது பைசல் அவர்கள் ஊடகங்களில் இச்செய்தியை தெரிவித்தார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்