
தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (நாசா) நாளை சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிடர் விக்ரம் லேண்டர் தறையிரங்கிய தளத்தின் மீது பறக்கவிருக்கிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நிலவில் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருத்து வரும் சமிக்ஞைகளை இழந்தது. .
இருப்பினும் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 14 நாட்களுக்கு மட்டுமே லேண்டர் வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் அதற்குள் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் லேண்டர் சரியான முறையில் தரையிறங்கியிருந்தால் சந்திரனில் ஒரு பகல் பொழுது (லுனார் டே) மட்டும் ஆராய்ச்சி செய்திருக்கும். அதாவது 14 நாட்கள் வரை வேலை செய்யுமெனில் வரும் செப்டம்பர் 20,21-ம் தேதியோடு நிலவின் ஒரு பகல் பொழுது முடிகிறது. அதற்குள் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் நாசா இஸ்ரோவின் ஒப்புதலைப் பெற்று விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள நாசாவும் முயற்சி செய்து வருகிறது. நாசாவின் சந்திர புலனாய்வு ஆர்பிட்டரான எல்.ஆர்.ஓ நாளை விக்ரம் லேண்டரை படமெடுத்து அனுப்புமென்றும் அதனைப் பற்றிய தகவலை நாசா வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.