Categories: அரசியல்

நிதியமைச்சர் கருத்திற்கு மன்மோகன் பதில்!

பொருளாதாரத்தை சரி செய்யும் முன், நோயை கண்டறியாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதில் தான் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் கருத்திற்கு மன்மோகன் பதில்! 1

முன்னதாக பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “மன்மோகன் மற்றும் ராஜன் ஆகியோர் பிரதமராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்த போது இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு மோசமான கட்டத்தில் இயங்கியது” என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று (அக்.17) மகாராஷ்டிராவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன், “நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனின் அறிக்கையை தற்போது தான் பார்த்தேன். ஆனால் அதனை பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, “பொருளாதாரத்தை சரி செய்யும் முன், அதற்கு ஏற்பட்டுள்ள நோயை ஆராய வேண்டும். மேலும் அதற்கான காரணத்தையும் கண்டறிவது முக்கியம். ஆனால் தற்போதைய அரசாங்கம் எங்கள் மீது பழியை சுமர்த்துகிறது. எதிராளிகள் மீது பழி போடுவதால் மட்டுமே, பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை கொண்டு வந்துவிட முடியாது.

நான் பிரதமராக பொறுப்பேற்ற போது தற்போது எழுந்துள்ள சிக்கல் தான் இருந்தது. சின்ன சின்ன குறைபாடுகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருந்தது. ஆனால் அனைத்திற்கும் காங்கிரஸ் தான் காரணம் என்று சொல்லி விட முடியாது. எங்களுக்கு பிறகு 5 வருடங்கள் நீங்கள் ஆட்சியில் இருந்துள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்