Categories: சமூகம்

பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி!!

வெளியிட்டது
பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி!! 1

தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப் படும்’ என, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் வகையில், தீபாவளி நாளில், இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்’ என, 2018ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று, 2018 தீபாவளி நாளில், தமிழகத்தில், காலை, 6:00 மணி முதல், 7:00 மணி; மாலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.

இது, பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது; தடையை மீறி, பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து, மகிழ்ந்தனர். தடையை மீறி, பட்டாசு வெடித்ததாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்தாண்டு தீபாவளி பண்டிகை, 27ம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்தாண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கடந்தாண்டு போல இந்தாண்டும், காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என, தீபாவளி நாளில், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க, அனுமதி அளிக்கப்படும். அனுமதி மீறி பட்டாசு வெடிப்போர் மீது, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்