Categories: அரசியல்

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும், தொழில்துறையில் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப்.14) தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்தித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பணவீக்கத்தின் தன்மை 2.5 முதல் 4 சதவிகிதம் வரை இருப்பது அபாயகரமானது அல்ல என்று கூறினார்.

தற்போதைய நிலையில் இந்தியா மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையின் சந்தையில் விற்பனை தேக்கத்தை அடைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பொருளாதார மந்தநிலை குறித்து விளக்கி வருகிறார்.

மேலும் இச்சந்திப்பில் அவர் கூறும் போது, வங்கிகள் மூலமாக கடன் வழங்குவதை ஊக்குவிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறன. நுகர்வோர் விலை குறியீட்டு (சில்லறை பணவீக்கம்) 4 சதவிகிதமாக இருக்கிறது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட போவதில்லை. அதேபோல வங்கிசாரா நிதி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுகின்றன.

தற்போது உள்ள குறைபாடுகளை நீக்கி ஏற்றுமதிக்கான வரி செலுத்தும் முறையை எளிமையாக்கப்படும் வகையில் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. ஏற்றுமதி தயாரிப்புகளுக்கான வரிகுறைப்பு, அல்லது வரிகளை நீக்குதல் திட்டம் (RoDTEP) ஒரு புதிய திட்டமாகும். இந்த அனைத்து வணிக ஏற்றுமதியையும் முழுமையாக மாற்றும் இத்திட்டம் நிச்சயமாக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்