Categories: உலகம்

பாகிஸ்தான் தனது முதல் விண்வெளி வீரரை 2022 க்குள் விண்வெளிக்கு அனுப்புகிறது!

வெளியிட்டது
பாகிஸ்தான் தனது முதல் விண்வெளி வீரரை 2022 க்குள் விண்வெளிக்கு அனுப்புகிறது! 1

பாகிஸ்தான் 2022 ஆம் ஆண்டிற்குள் தனது முதல் விண்வெளி வீரரை சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சவுத்ரி ஃபவாத் உசேன் தன்னுடைய நாட்டின் முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப சீீீனா உதவும் என்று கூறி இருக்கிறார். மேலும் விண்வெளி வீரரை தேர்வு செய்யப்படும் முறை 2020-ஆம் ஆண்டில் தொடங்குமென்றும் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று கூறியுள்ளார்.

முதல் கட்டமாக ஐம்பது வீரர்களைத் தேர்வு செய்யப்படும் என்றும் பிறகு அந்த எண்ணிக்கை 25–ஆக குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் விமானப்படையும் தேர்வு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஒத்துழைப்பு பிராந்தியத்திற்கு பலனளிக்கும் என்பதையும் அவர் கூறினார்.

மேலும் 1963–ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஆசியாவிலேயே விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பிய இரண்டாவது நாடாக திகழ்ந்தது என்று சவுத்ரி ஃபவாத் உசேன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் விண்வெளி அறிவியல் கல்வி மையம் நாட்டில் விண்வெளி அறிவியலை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறதாகவும் சவுத்ரி கூறியுள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்