Categories: அரசியல்

பாகிஸ்தான் வெளிவேஷம் போடுகிறது: தரூர்

ஜம்மு-காஷ்மீரில் எண்ணற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான ஒரு அரசு வெளிவேஷம் போடுவதாக, பாகிஸ்தானை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.

செர்பியாவில் உள்ள சர்வதேச நாடாளுமன்ற யூனியன் மன்றத்தின் 141வது கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், திமுக எம்.பி கனிமொழி உள்ளிடட இந்திய எம்.பிக்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய சசி தரூர், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூது குழு ஆதாரமற்ற குற்றசாட்டுகளை அளித்துள்ளது. ஆனால் அதனை இந்திய தூது குழு ஏற்கனவே மறுத்துள்ளது. இந்தியாவிற்குள் தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. அதனை அவர்களின் குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

பாகிஸ்தான் வெளிவேஷம் போடுகிறது: தரூர் 1
சசி தரூர்.

இந்தியா போர் என்றால் ஜனநாயக முறைப்படி தான் எதிர்கொள்ளும், எல்லையை தாண்டி தலையீடு செய்வதை விரும்பியதுமில்லை, அதனை வரவேற்பதுமில்லை என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீரில் எண்ணற்ற எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை ஊக்குவித்த ஒரு நாடு, சர்வதேச சட்டத்தின் படி நேர்மையாக இருப்பது போன்ற மாயை தோற்றத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது என்பது தான் அதன் முரண்.

ஐ.நா.வால் பட்டியலிடப்பட்ட 130 பயங்கரவாதிகள் மற்றும் 25 பயங்கரவாத நிறுவனங்கள் பாகிஸ்தானில் உள்ளன. பயங்கரவாதம் மனித உரிமைகளை அழிக்கக்கூடியதாக இருக்கும்போது, ​​அத்தகைய அரசின் பிரதிநிதியிடமிருந்து மனித உரிமைகளை மதித்தல் பற்றிய முழுமையான கருத்துக்களைக் கேட்பது அபத்தமானது என்று சசி தரூர் குற்றம்சாட்டினார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்