Categories: அரசியல்

பாராளுமன்ற நிலைக்குழு தலைவர்கள் நியமனம்!

பல்வேறு துறைகளுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு இன்று (செப்.14) அறிவித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் முக்கிய மசோதக்கள் தாக்கல் செய்யப்படும் போது பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, அம்மசோதாவின் உறுதி தன்மை ஆராயப்படும். அக்குழுவில் பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.பிகளுக்கும் இடம்பெறுவர். அவ்வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு நிலைக்குக்குழுவிற்கு தலைவர்களையும், உறுப்பினர்களையும் நியமித்திருக்கிறது. அதில் திமுகவின் எம்.பியும், அதன் மக்களவை துணை தலைவருமான கனிமொழி உரத்துறைக்கான தலைவராக நியமிக்கபப்ட்டுளார்.

அதே போல, வர்த்தக துறை நிலைக்குழு தலைவராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி விஜயசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல பாதுகாப்பு துறைக்கு தலைவராக பாஜக எம்.பியும், ஒடிசா மாநில தலைவருமான ஜுவால் ஓரம் அறிவிக்கப்பட்டுளார்.

நிதித்துறை தலைவராக பாஜாகா கட்சியின் ஜெயந்த் சின்கா, வெளியுறவுத்துறைக்கு பிஜு ஜனதா தளத்தின் பி.பி.சவுத்ரி தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் உறுப்பினராகவும் இடம்பற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா உள்துறை அமைச்சகத்திற்கு, சசி தரூர் தகவல் தொடர்ப்பு துறைக்கும், ஜெயராம் ரமேஷ் அறிவியல் மற்றும் பாஜவின் டி.ஜி.வெங்கடேஷ் போக்குவரத்து துறைக்கும், சாத்தியநாராயன் மனித வளம் துறைக்கும், சுற்றச்சுழல் பாதுகாப்பு துறைக்கு சாக்ஷி மகாராஜனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர, திமுகவின் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கதிர் ஆனந்த், டி,கே.எஸ்.இளங்கோவன், கலாநிதி வீராசாமி, காங்கிரசின் கார்த்திக் சிதம்பரம், அதிமுகவின் நவநீத கிருஷ்ணன் ஆகியோரும் நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்