Categories: சினிமா

பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்க போகும் கன்னக்குழி அழகி ஷாலினி பாண்டே!!

வெளியிட்டது
பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்க போகும் கன்னக்குழி அழகி ஷாலினி பாண்டே!! 1

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. மிகவும் சாதுவான கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே அதில் நடித்திருந்தார். அறிமுகமான முதல் படத்திலே இவருக்கு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அமகோ வரவேற்பு கிடைத்தது.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷுடன் தோழியாக நடித்திருந்தார். பின்பு’கொரில்லா’, ‘100% காதல்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதைதொர்ந்து ஷாலினி பாண்டே ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் இயக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் அந்த படத்திலிருந்து அவர் விலகி கொள்ள அப்படத்தில் அக்ஷரா ஹாசன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில் அடுத்தாக ஷாலினி பாண்டே பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெயேஷ்பை ஜோர்டர்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்ததால், முந்தைய படத்திலிருந்து ஷாலினி விலகி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை திவ்யங் தக்கர் எனும் அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இதன் மூலம் ஷாலினி பாண்டே பாலிவுட்டில் கால்பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் படத்தின் கூடுதல் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்