பிகில் வெறித்தனம்! பரபரப்பாகும் விஜய் போஸ்டர்!!

பிகில் வெறித்தனம்! பரபரப்பாகும் விஜய் போஸ்டர்!! 1

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழும் விஜய் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனையடுத்து பிகில் திரைப்படக் குழு வெளியிட்ட போஸ்டர் பார்த்தாலே பீதியைக் கிளப்புகிறது.

பிகில் படத்தின் முதல் போஸ்டரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வன்முறையை உள்ளடக்கிய படம் என்பதை உணர்த்தினாலும், அது சர்சைக்குரிய வகையில் அமையவில்லை.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் நாயகன் வெறித்தனமாக கையில் பட்டாக்கத்தி பிடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
வன்முறையைத் தூண்டும் விதமான பட காட்சிகளை எடுப்பதும் போஸ்டர்களை வெளியிடுவதும் தமிழ் சினிமாவுக்கு புதியதில்லை. ஆனாலும், தமிழகத்தில், குறிப்பாகத் தலைநகர் சென்னையில் பட்டாக்கத்தி கலாச்சாரம் பரவிவரும் நிலையில் இது மாதிரியான காட்சிகள் தேவையானதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதுகுறித்து படக்குழு சிந்திக்காதது ஏன்?

விளம்பரம்

மாணவர்கள் தங்களது விருப்பமான நாயகர்களைக் கண்டறிந்து அவர்கள் பின்பற்றிய ஸ்டைல்களை பின்பற்றுவது வழக்கமாக உள்ளது. அதற்கு முதல் தளமாக சினிமா இருக்கிறது. மற்றெந்தக் கலை வடிவத்தை விடவும் சினிமாவால் தனிமனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தொடர்புடையவை  விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்.! பதிலுக்கு ஜெயிலர் படத்தை வச்சி செய்யும் விஜய் ரசிகர்கள்.!

ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் ரசிகர்கள் தங்களை அந்தந்தப் படத்தின் நாயகர்களைப் போலவே சித்தரித்துக்கொள்வதும் சினிமா ஏற்படுத்தியிருக்கும் தனிமனிதத் தாக்கம்தான். வேட்டைக்காரன் தொப்பி, அண்னாமலை ருத்ராட்சம், வேதாளம் செயின் என்று பல படங்களில் உள்ள பல ஸ்டைல்கள் இளைஞர்களை மையமாக கொண்டு பின்பற்றி வருகின்றனர்.

விளம்பரம்

இந்நிலையில், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில், பட்டாக்கத்தியுடன் தங்கள் நாயகன் வலம்வருவது, ரசிகர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டாதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment