Categories: சினிமா

பிக் பாஸ் சாண்டி மற்றும் தர்ஷனை சந்தித்த சிம்பு!!

வெளியிட்டது
பிக் பாஸ் சாண்டி மற்றும் தர்ஷனை சந்தித்த சிம்பு!! 1

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக சாண்டி, தர்ஷனை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களை சந்தித்து சிம்பு பேசியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 3. இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த 6 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், முகென் ராவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு பிக் பாஸ் 3 டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து சாண்டி 2 ஆம் இடம் பிடித்தார். ஆனால், உண்மையில், தர்ஷன் என்பவர் வெற்றி பெறுவார் என்று போட்டியாளர்களும் சரி பார்வையாளர்களும் சரி எண்ணிக் கொண்டிருந்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

என்றபோதிலும், பிக் பாஸ் டைட்டில் வாங்கவில்லை என்றாலும்கூட, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். அதோடு, கமல் ஹாசனின், ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்நிலையில், அண்மையில் தாய்லாந்திலிருந்து சென்னை திரும்பிய சிம்பு, சாண்டி மற்றும் தர்ஷனை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களை சந்தித்து பேசியிருக்கிறார். மேலும், அவர்களுக்கு பரிசும் கொடுத்திருந்தார். அப்போது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் மகத்தும் இருந்துள்ளார். இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்