பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம்!

வெளியிட்டது
பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம்! 1

பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

பிரஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி முன்னேறினார்கள். அவர்கள் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் இணையான இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்ஜெயா சுகாமுல்ஜோ ஜோடியை எதிர்கொண்டனர். அதில் 18-21, 16-21 என்ற கணக்கில் இந்திய வீீீரர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தனர்.

பிரஞ்சு ஓபனில் வென்ற இந்தியாவின் கடைசி ஜோடி பார்தோ கங்குலி – விக்ரம் சிங் ஆவார். இவர்கள் 1983ம் ஆண்டில் பிரஞ்சு ஓபனில் வெற்றி பெற்றனர். சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற தாய்லாந்து ஓபனில் அவர்கள் தங்களின் முதல் சூப்பர் 500 பட்டத்தை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்