Categories: சமூகம்

புதிய இந்திய பாஸ்போர்ட்டுகளில் தாமரை மலர் சின்னம்…!

வெளியிட்டது
புதிய இந்திய பாஸ்போர்ட்டுகளில் தாமரை மலர் சின்னம்...! 1

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடில் புதிதாக விநியோகம் செய்து வரும் இந்திய பாஸ்போர்ட்டுகளில் தாமரை மலரின் சின்னம் அச்சடிக்கப்பட்டுள்ளதால் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் காங்கிரஸின் எம்.கே.ராகவன் நேற்று முன்தினம் இதனைப் பற்றி பிரச்சினை எழுப்பினார்.

எதிர்கட்சி உறுப்பினர் அவர் கூறியதாவது புதிதாக அச்சிடப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டுகளில் உள்ள தாமரை மலர் சின்னம் பா.ஜ.க கட்சியை குறிக்கும் வகையில் உள்ளதாக கூறியிருந்தார். இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரவீஷ் குமார் அவர்கள் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது

“தாமரை நமது தேசிய மலராகும். நமது தேசிய சின்னங்களில் ஒன்று. இவை போலி பாஸ்போர்ட்டுகளை எளிதாக கண்டுபிடிப்பதற்கான ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இந்த பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச சிவில் விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதர சின்னங்களும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பாஸ்போர்ட் மீது பதிக்கப்படும்.”

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்