Categories: உலகம்

புதிய விண்வெளி உடைகளை வெளியிட்டது நாசா!!

வெளியிட்டது
புதிய விண்வெளி உடைகளை வெளியிட்டது நாசா!! 1

அமெரிக்காவின் நாசா (தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்) தனது ஆர்திமிஸ் பணிக்காக விண்வெளி வீரர்களுக்கு புதிய விண்வெளி உடைகளை வெளியிட்டுள்ளது. இது வரவிருக்கும் சந்திரன் மற்றும் செவ்வாய் பணிகளுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.

நாசா இன்று ஒரு பெரிய, சிவப்பு-வெள்ளை மற்றும் நீல நிறத்தை உடைய புதிய விண்வெளி உடையை (ஸ்பேஸ்சூட்) அணிந்த ஒரு விண்வெளி உடை பொறியாளரின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டது. இது சந்திரன் பணியின் போது சந்திரனில் வேலை செய்ய பயன்படுத்தப்படும். மற்றொரு விண்வெளி உடை பொறியாளர் ஆரஞ்சு நிற விண்வெளி உடைையை அணிந்திருந்தார். இது சந்திரனுக்குச் செல்லும்போதும் வரும்போதும் பயன்படுத்தப்படும் என்று நாசா கூறியுது. மேலும் அவர்களின் விண்கலத்தில் திடீர் கோளார் ஏற்பட்டாலும் அந்த உடையின் உதவியுடன் சில நாட்கள் வாழலாம் என்றும் கூறியுள்ளது.

நாசா இந்த விண்வெளி உடைகளை செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த உடைகள் அனைவருக்கும் பொருந்துமாறு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

“விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு நபரும் ‘ஆம், எங்களுக்கும் அந்த வாய்ப்பு உள்ளது,’ என்று தங்களுக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

என்று நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறியுள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்