Categories: உலகம்

புதைபடிவ பதிவில் பிளாஸ்டிக் மாசுபாடு! ஆய்வுகள் கூறுகிறது.

வெளியிட்டது
புதைபடிவ பதிவில் பிளாஸ்டிக் மாசுபாடு! ஆய்வுகள் கூறுகிறது. 1

ஒரு புதிய ஆய்வில் பிளாஸ்டிக் மாசுபாடு புதைபடிவ பதிவில் நுழைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. அதன் வைப்புத்தொகையும் 1945 ஆம் ஆண்டு முதல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

சான் டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தின் கடல்சார்வியலின் ஸ்கிரிப்ஸ் நிறுவனம் புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்த ஆய்வின் படி 1834 ஆம் ஆண்டில் இருந்து பூமியின் அடுக்குகளை ஆய்வு செய்தபோது இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து பிளாஸ்டிக் வைப்பு அதிவேகமாக அதிகரித்துள்ளதாக கண்டு பிடித்துள்ளனர். மேலும் இவை ஒவ்வொரு பதினைந்து வருடங்களுக்கும் இரட்டிப்பாகும்.

பெரும்பாலான பிளாஸ்டிக் துகள்கள் துணிகளில் பயன்படுத்தப்படும் செயற்கை துணிகளிலிருந்த இழைகளாகும். இவை கழிவுநீர் மூலமாக கடலில் சேர்கிறது. வண்டல்களில் அதிகரிக்கும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பொருட்களின் அதிகரிப்பு விகிதத்தை குறிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் 1945 ஆம் ஆண்டில் வண்டலில் பிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் அதன் அளவு விரைவாக அதிகரித்தது. அடுத்து 2010 ஆம் ஆண்டில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது முன்பை விட இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மக்கள் 10 மடங்கு அதிகமான பிளாஸ்டிக்கை பேஸினுள் செலுத்துகின்றனர் என்பது கண்டறியப்பட்டது.

போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இழைகளைத் தவிற பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் துகள்கள் போன்றவற்றை பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்