Categories: உலகம்

பூமியைப் போன்றதொரு கோளில் நீராவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!

வெளியிட்டது
பூமியைப் போன்றதொரு கோளில் நீராவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது! 1

நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி முதன்முறையாக பூமியைப் போன்ற எக்ஸோபிளேனட்டில் நீராவி இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வானியலாளர்களுக்கு உதவியது. சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள ஒரு கோளில் உயிர் வாழ்வதற்கு தேவையான நீர் திரவ வடிவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூமியைப் போன்று காணப்படும் கோள் k2-18b என்று அழைக்கப்படுகிறது. இது 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது, வெப்பநிலை மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லை, இதில் திரவ நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மிக அதிக அழுத்த சூழ்நிலையைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பல கோள்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும் அவை வளிமண்டலத்தை கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை வாயு உருண்டைகளாக உள்ளன. பல கோள்கள் பாறைகளுடைய நிலத்தரை கொண்டிருந்தாலும் அவற்றில் வளிமண்டலம் இல்லை. ஆனால் இவ்விரு அம்சங்களை கொண்ட கோள்களில் நீர் திரவ வடிவில் இல்லை. இந்த நிலையில் பூமியைப் போன்ற கோளை கண்டறிந்ததால் விஞ்ஞானிகள் நம்பிக்கை அடைந்தனர்.

நீர் திரவ வடிவில் இருந்தால் மட்டுமே வளிமண்டலத்தில் நீராவி கலந்திருக்கும். அதே போன்று k2–18b கிரகத்தில் நீராவி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியமான பூமியைப் போன்ற தட்பவெப்ப நிலையை இந்த கோள் கொண்டுள்ளது.

சூரிய மண்டலத்திற்கு வெளியே உயிர்கள் வாழ சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு மிகப்பொருத்தமான கோள் இதுதான் என்று நம்பப்படுகிறது,

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்