பெண்ணை ஆதரவு உழியராக நியமித்த முதல் ஐ.பி.எல் அணி!!

வெளியிட்டது
பெண்ணை ஆதரவு உழியராக நியமித்த முதல் ஐ.பி.எல் அணி!! 1

இந்திய பிரீமியர் லீக்கின் ஒரு அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அணி தான் பெண்ணை முதன்முதலாக ஆதரவு உழியராக வியாழக்கிழமை ஆன இன்று நியமித்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இந்தியாவின் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவருமான வீராட் கோலி அவர்களை கேப்டனாகக் கொண்ட ஆர்.சி.பி. அணி நிவேதா கெளதம் என்னும் பெண்ணை அந்த அணியின் விளையாட்டு மசாஜ் சிகிச்சையாளராக நியமித்துள்ளது. மசாஜ் சிகிச்சையை செயல்படுத்த நவ்னிதா தலைமை பிசியோதெரபிஸ்ட் இவான் ஸ்பீச்லி மற்றும் வலிமை & கண்டிஷனிங் பயிற்சியாளர் ஷங்கர் பாசு ஆகியோருடன் இணைவார். தயாரிப்பு, உந்துதல், ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் அணி தொடர்பான அனைத்து தனிப்பட்ட உடல் நோய்கள் தொடர்பான சிறப்பு நுட்பங்களைச் செய்வதற்கும் அவர் பொறுப்பாவார். ட்விட்டரில்

“ஐ. பி. எல் இன் 13வது பதிப்பிற்காக எங்கள் அணியின் விளையாட்டு மசாஜ் சிகிக்சையாளராக நிவேதா கெளதம் எங்களுடன் இணைகிறார். அணியினை சிறப்பாக தயாராக்கவும் மீட்பதற்காகவும் உதவும் வகையில் மசாஜ் சிகிச்சையை அடையாளம் காணவும், செயல்படுத்தவும் அவர் பணியாற்றுவார். ஒரு பெண் ஆதரவு ஊழியர்களைக் கொண்ட முதல் ஐபிஎல் அணி என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்”

என்று ஆர்.சி.பி ட்வீட் செய்துள்ளது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்