Categories: சமூகம்

பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!!

வெளியிட்டது

அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்யும் மக்கள், இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்குச் சென்று அங்கு உறவுகளோடு விழாவை கொண்டாடி மகிழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி. அதுவும் தீபாவளி, பொங்கல் ஆகியவை தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகள் உள்ளது .

வேலை பார்த்து கொண்டு வெளியூர்களுக்கு வேலை தேடிச் சென்று, அங்கேயே தொடர்ந்து வசிக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே பண்டிகை வந்துவிட்டால், உறவினர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஊருக்குக் கிளம்பிச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.2020ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு இப்போதே தயாராகுங்கள் என்று ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, பொங்கலுக்கு ஊருக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

பயணம் செய்வதற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவைப் செய்து கொள்ளலாம். அதன்படி, வரும் அடுத்த ஆண்டு ஜனவரி 10ல் பயணம் செய்ய இன்று(செப்டம்பர் 12) முன்பதிவு செய்யலாம்.இன்று காலை சரியாக 8 மணி முதல் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு தொடங்குகிறது. இதேபோன்று ஜனவரி 11, 2020கான முன்பதிவு செப்டம்பர் 13, ஜனவரி 12, 2020கான முன்பதிவு செப்டம்பர் 14, ஜனவரி 13, 2020கான முன்பதிவு செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு 2020 ல் பொங்கல் திருவிழா ஜனவரி 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நாளுக்குச் செப்டம்பர் 16ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி விட்டு, மீண்டும் ஊர் திரும்ப ஜனவரி 17, 2020கான முன்பதிவு செப்டம்பர் 19, ஜனவரி 18, 2020கான முன்பதிவு செப்டம்பர் 20, ஜனவரி 19, 2020கான முன்பதிவு செப்டம்பர் 21 ஆகிய தேதிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயணிகள் இதற்கு ஏற்ற வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்