Categories: சமூகம்

பொது இடத்தில் நடுவிரலைக் காட்டினால் ஜெயில்!!

வெளியிட்டது
பொது இடத்தில் நடுவிரலைக் காட்டினால் ஜெயில்!! 1

பெண்களிடம் நடுவிரலை காட்டினால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூறுகிறது சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு. டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆண் தனது உறவினர் பெண்ணிடம் ஆபாசமான உடல்மொழியுடன் நடந்துகொண்டது மட்டும் இல்லமால் நடுவிரலைக் காட்டியுள்ளார். அத்துடன் உடல் ரீதியாகவும் அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

21 மே, 2014ஆம் ஆண்டு அப் பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 509, 323ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 8 அக்டோபர் 2015ஆம் ஆண்டு நீதிமன்றம் அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வகுத்தது. குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் மறுத்ததுடன் இது சொத்து தகராறு காரணமாக கூறப்பட்ட பொய் புகார் என்று கூறியிருந்தார்.

தற்போது இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் வசுந்தரா ஆசாத், குற்றம் சாட்டப்பட்ட நபரின் நடவடிக்கைகள் ஒரு பெண்ணின் அடக்கத்தை சீற்குலைக்கும் நோக்கில் சொற்கள் அல்லது சைகைகளைச் செய்வதாகும் என்று கூறினார்.இதனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தண்டனை விவரங்கள் செவ்வாய் கிழமை அன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்று பொது இடத்தில் நடந்து கொள்வது யாராயினும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உ‌த்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்