Categories: கல்வி

பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கும் சிறப்பு தகுதி தேர்வா? அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் தீடீர் அறிவிப்பு!!

வெளியிட்டது

பொறியியல் கல்லூரிகளில் பேராசி ரியர்களாக பணியாற்ற ஓராண்டு இணையதள சிறப்பு படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
நம்நாட்டில் பெரும்பாலான பொறியியல் கல் லூரிகளில் பேராசிரியராக பணி புரிய முதன்மை தகுதியாக முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மாற்றி அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியிட்டுள்ள தகவலின் படி , பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய இனி ஓராண்டு சிறப்பு படிப்பு கட்டாயமாக்கப்பட் டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ தலை வர் அனில் டி சஹஸ்ரபுத்தே கூறியதாவது: முதுநிலை பட்டம் பெற்றுள்ள பட்டதாரிகள் ஏஐசிடிஇ நடத்தும் ஓராண்டு இணையதள சிறப்பு படிப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிய முடியும்.ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறும் கட்டத்தில் இந்தத் தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பின் தரத்தை உயர்த்தவும் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து , வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவை மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண் டும் வகையில் அமைக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
மேலும், பொறியியல் கல்வியில் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த நடப்பு கல்வி ஆண்டு முதல் பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பிரிவுகள் என்ற படிப்பு தொடங்கப்படும். மேலும், புதிதாக பணியில் சேரும் பேராசிரியர்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சிகளும் அளிக் கப்படும்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்