மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு

மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்நகர் கும்பல் தாக்குதல்களை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, நடிகை ரேவதி ஆகியோர் கடந்த ஜூலை மாதம் கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

விளம்பரம்
மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு 1

அக்கடிதத்தில், மத வெறுப்புகளை அதிகப்படுவதால், வன்முறைகள் நிறைய நிகழ்கின்றன. அரசை விமர்சிப்பதால், அர்பன் நக்சல், தேச விரோதி போன்று முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. அதேபோல, ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் தற்போது கும்பல் கலவரங்களை ஏற்படுத்த பயன்படுகிறது. இதனால், குடிமக்கள் தங்களது நாட்டில் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் அமைப்புபடி மக்கள் தங்களது உரிமையை பெற்றாக வேண்டும் என்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுவதாகவும், முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்புடையவை  உள்ளாட்சி தேர்தலிலுக்கு நவம்பர் 15, 16 தேதிகளில் அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செல்லலாம்!!

இதனை தொடர்ந்து, பீகார் மாநில வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தியதுடன், பிரதமரின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன், பிரிவினைவாத போக்குகளை ஆதரித்ததற்காக கூறி முசாபர்நகர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கினைத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

விளம்பரம்

இதன் அடிப்படையில், முசாபர்நகர் போலீசார், தேச துரோகம், பொது அமைதியை குலைத்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கினை பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment