சமகாலத்தில் பொதுத்துறை நிறுவங்கள் நோயப்பட்டு கிடப்படத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோரே காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக சர்வதேச மற்றும் பொதுவிவகார பள்ளியில் மாணவர்களிடையே இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று உரையாற்றினார்.
அப்போது, இந்தியாவில் இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தன்னுடைய நிர்வாகத்தில் உயிர் நாடி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் பேசுகையில், இந்திய பொருளாதாரம் அனைத்தும் மந்த நிலையில் இருந்த போது, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றிய ரகுராம் ராஜனை மதிக்கிறேன். ஆனால், அவரின் பனி காலத்தில் வங்கி கடன்கள் அதிகமாக இருந்தன. அது மிக பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் அப்போதைய எடுபிடி தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் வேண்டியவர்களுக்கு தேவையானதை விட அதிகமாக வழங்கப்பட்டது.

மன்மோகன் பொருளாதாரத்தை பற்றி நிலையான வெளிப்படையான பார்வையைகே கொண்டிருப்பார் என்று ராஜன் நம்பி இருப்பார் போல. இதை நான் கேலி செய்வதற்காக சொல்லவில்லை. ஆனால் இந்த கருத்தை சொல்ல வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
காரணம், மன்மோகன் மற்றும் ராஜன் ஆகியோர் பிரதமராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்த போது இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு மோசமான கட்டத்தில் இயங்கியது என்ற உண்மையை நான் சொல்ல வேண்டும்.
ஜனநாயகப்படுத்தப்பட்ட தலைமையில் முழு ஊழலுக்கும் வழிவகுத்துள்ளது. தாராளவாதிகளின் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒப்புதலில் இயங்கிய ஜனநாயக தலைமையை கண்டு பயம் கொள்ள வேண்டியது உள்ளது. காரணம் அது துர்நாற்றமுடைய ஊழலை விட்டு சென்றிருக்கிறார்கள். அதனை இன்று நாங்கள் சுத்தம் செய்துகொண்டிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோரை விமர்சித்துள்ளார்.