Categories: சினிமா

மறுபடியும் சினிமாவில் நடிக்க வரும் அசின்! வரவேற்பது கோலிவுட்டா? பாலிவுட்டா?

வெளியிட்டது
மறுபடியும் சினிமாவில் நடிக்க வரும் அசின்! வரவேற்பது கோலிவுட்டா? பாலிவுட்டா? 1

‘உள்ளம் கேட்குமே’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசின். கேரளாவைச் பிறந்து வளர்ந்த இவர் விஜய், அஜித்,கமல், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்கள் நடித்து கொடுத்துள்ளார்.

கோலிவுட்டில் மாபெரும் முன்னணி நாயகியாக திகழ்ந்த இவர், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனரான ராகுல் ஷர்மாவை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதிலிருந்து அசின் இனி படத்தில் நடிக்கமாட்டார் என்று வதந்திகள் பல பரவியது. ஆனால் வடிவேலு பாணியில் சொன்னால் “எனக்கு எண்டே கிடையாது” என்று சொல்லி மீண்டும் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார் அசின். இதை உறுதிசெய்யும் வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக உள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பாலிவுட்டா? அல்ல கோலிவுட்டா? என்று கேள்வி எழுப்பி பல ட்ரோல் களை செய்து வருகின்றனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்