Categories: உலகம்

முதன்முறையாக வண்ணத்தை மாற்றும் ஸ்மார்ட் தோலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

வெளியிட்டது
முதன்முறையாக வண்ணத்தை மாற்றும் ஸ்மார்ட் தோலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 1

ஆராய்ச்சியாளர்கள் ஒரு பச்சோந்தியால் ஈர்க்கப்பட்ட ஸ்மார்ட் சருமத்தை உருவாக்கியுள்ளனர், இது வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் வெளிப்படும் போது நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. இந்த புதிய நெகிழ்வான பொருளில் சமிக்ஞை, உருமறைப்பு மற்றும் கள்ள எதிர்ப்பு போன்ற பயன்பாடுகளை காணலாம் என்று நம்பப்படுகிறது.

பச்சோந்திகளைத் தவிர, டெட்ரா மீன் போன்ற பல உயிரினங்களில் நிறம் மாறும் தன்மை இருந்தாலும் வண்ணமயமாக்கல் நிறமிகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் இது மீண்டும் மீண்டும் வரும் வடிவத்தில் சிறிய துகள்களை அடிப்படையாகக் கொண்டது. இது ஃபோடானிக் படிகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்கா கெமிக்கல் சொசைட்டியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த ஃபோடானிக் படிகங்களை ஹைட்ரஜெல் ( நீரேரிய களி) என்ற நெகிழ்வான பொருளில் பதித்தனர். மேலும் ஒரு துருத்தி போன்ற பொருளை சுருக்கி அல்லது விரிவாக்குவதன் மூலம் அவற்றின் வண்ணங்களை மாற்ற முடிந்ததாக கூறுகின்றனர். இருப்பினும் இதுபோன்ற திடீர் மாற்றங்களால் அதன் செயல் திறனை சமரசம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் கூறினர்.

ஆதலால் ஸ்மார்ட் சருமத்தை உருவாக்கினர். ஏனெனில் ஸ்மார்ட் சருமம் நெகிழ்வான மற்றும் மாறும் நிலைமைகளின் கீழ் நெகிழக்கூடியதாக இருந்தது. இப்பொருள் சூடாகும்போது நிறத்தை மாற்றினாலும், அதன் ஒருமைப்பாட்டையும் அளவையும் பராமரிக்க முடிந்தது. இவையே இதன் தனித்தன்மைகள்.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் சூரியனின் கீழ் இப்பொருளை சோதனை செய்தபொழுது சாஸ் மென் படலம் தன் அளவை மாற்றிக் கொள்ளாமல் ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறியது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்