இந்தியாவின் ஒற்றுமைக்கு, தேசிய மொழி என்பது அச்சுறுத்தலாக இருக்கும்.
சமீபத்தில் கொண்டாடப்பட்ட இந்தி தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். இந்திய அமைச்சரவையில் இரண்டாவது மிக சக்திவாய்ந்த மனிதர் என்று கருதப்படும் ஒருவர் “இந்தியாவிற்கென்று ஒரு மொழி இருப்பது அவசியம்” என்றும் “இந்தி தான் நாட்டை ஒன்றிணைக்கும், இது நாட்டின் அதிகம் பேசப்படும் மொழி” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, இந்தியாவுக்கு தேசிய மொழி இல்லை. மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் மொழியைப் பயன்படுத்துகின்றன, மத்திய அரசு ஆங்கிலம் மற்றும் இந்தியைப் பயன்படுத்தி வருகிறது.
ஆனால் அமித் ஷாவின் அறிக்கை எதிர்பாராதது அல்ல. இந்துத்துவா இயக்கம் துவங்கியதிலிருந்தே, இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும், இந்தியாவை ஐரோப்பிய பாணியிலான ஒற்றையாட்சி தேசமாக மாற்றவேண்டும் என்று கூறிவருகிறது. இந்துத்துவ தேசியவாதத்தின் அடித்தள சிந்தனையாளரான விநாயக் சாவர்க்கர் 1939 இல் பேசும் போது இந்தி இந்துத்துவத்தின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றார்.
இருப்பினும், இந்த சிந்தனையின் எல்லை இந்துத்துவ தேசியவாதத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய துணைக் கண்டத்தின் மொழியியல் பன்முகத்தன்மையைக் கட்டுப்படுத்த விரும்பிய பல சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளும் “ஒரு தேசிய மொழி” என்ற இயக்கத்தை குறித்து பேச ஆரம்பித்து விட்டனர்.

எனினும், இந்தியாவின் ஒற்றுமை அதன் மொழியியல் பன்முகத்தன்மையை அச்சுறுத்தலாகக் கருதாமல், தேசத்தின் முக்கிய அம்சமாகக் எண்ணுவதே இந்நாட்டிற்கு கடமைப்பட்டிருப்பதாக இருக்கும் என்று விரும்புகிறது. ஒரு மொழியியல் கூட்டமைப்பின் உருவாக்கமானது, உலகில் நடைமுறையில் தனித்துவமானது, மேலும் முக்கியமானதாக இருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியில் அதன் சட்டத்தின் கீழ், இந்தியாவின் சுதேச மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு மொழியியல் தன்மை இல்லாமல் இருந்தது. அவை வரலாற்று பிழையாலோ அல்லது பேரரசின் வசதிக்காகவோ மக்கள் ஒன்றுபடுத்தப்பட்ட, மேலும் சீரற்ற கூட்டங்களாக இருந்தனர்.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு, வெகுஜன அரசியல் புதிதாக வளர்ந்தவுடன், காங்கிரஸ் கட்சி மொழி சமூகங்களை நோக்கி அரசியலை நகர்த்தியது. அதன் விளைவாக மொழியியல் ஒற்றுமையின் மூலம் அரசியலுக்கு அணிதிரட்டல் பணியை எளிதாக்கியது.
1920 ஆம் ஆண்டில், மோகன்தாஸ் காந்தியின் தலைமையில் இயங்கிய காங்கிரஸ், மொழியின் அடிப்படையில் மாகாணங்களை மறுசீரமைக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொண்டது. அதன்படி, காங்கிரஸே இந்த கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. ஆனால் அவை பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணங்களாக இல்லை. 1945-46 தேர்தல்களுக்கான காங்கிரஸ் அறிக்கையில் அரசியலமைப்பு சபையைத் தேர்ந்தெடுத்தது, மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்படும் என்று உறுதியளித்தது.
1947 இல் காங்கிரசுக்கு சுதேசி அதிகாரம் வந்ததும், கட்சி தனது நிலைப்பாட்டைக் குறைத்து கொண்டது. 1947 க்கு முன்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணங்களை அது எதிர்த்திருந்தாலும், காங்கிரஸ் மைய அதிகாரங்களை கைப்பற்றியதும், அது திடீரென்று மாநிலங்களுக்கான தகுதியைக் கணக்கில் கொள்ள ஆரம்பித்தது. அதன் விளைவாக தான், ஜவஹர்லால் நேரு மொழியியல் அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று வாதிட்டார். இது பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவாக உருப்பெருகிறது. கொள்கை அடிப்படையில், அமித் ஷா மற்றும் நேரு இருவரும் அதிகளவில் உடன்பட மாட்டார்கள் என்றாலும், அவர்கள் இருவரும் இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகக் கண்டது புலப்படுகிறது.
மொழி விவகாரத்தில் நேருவின் முடிவை காங்கிரசில் வல்லபாய் படேல் போன்ற பிற தேசிய தலைவர்களால் ஆதரிக்கப்பட்டது. அவர்கள் உத்தேசித்து இருந்த புதிய நாட்டிற்காக வலுவான மைய அரசின் யோசனைக்கு மொழிவாரி மாநிலங்கள் முரணாக இருப்பதை நேரு உணர்ந்தார்.
1948 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு சபையால் உருவாக்கப்பட்ட தார் கமிஷன், “நிர்வாக வசதி” என்பதற்காக மொழியியல் மாநிலங்களை உருவாக்குவதை நிராகரித்தது. அதே ஆண்டில் காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட மற்றொரு குழு ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபாய் சீதாராமையா ஆகிய மூன்று பெரும் தலைவர்களை உள்ளடக்கியது. அக்கமிட்டியும் அதனை நிராகரித்தது.
“மொழி ஒரு பிணைப்பு சக்தியாக மட்டுமல்லாமல், பிரிக்கும் சக்தியாகவும் இருக்கிறது” என அக்கமிட்டி கூறியது. மேலும், “இந்தியாவின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை மட்டுமே முதன்மையானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினைவாத மற்றும் சீர்குலைக்கும் போக்கையும் ஊக்கப்படுத்தக் கூடாது” என்றது.
இதன் மூலமாக, காங்கிரசின் கொள்கை பின்னடைவை சந்தித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்த்து, இந்தனை, ஆய்வு செய்ய மாநிலங்களை மறுசீரமைக்கும் ஆணையத்தை நியமித்தது மத்திய அரசு.
(தொடரும்…)
ஆங்கிலத்தில் சோயிப் டானியல்
தமிழில் தமிழ்முரசு
நன்றி Scroll.in