Categories: சினிமா

யஷ்லாம் ஒரு ஹீரோவே இல்லை!!இவரையே நீங்க கொண்டாடுறீங்க!!!திடீரென போர்க்கொடி தூக்கிய கன்னட ரசிகர்கள்.

வெளியிட்டது

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான “கே.ஜி.எஃப் 2” படம் இப்போது மொத இந்தியாவையும் பேச வைத்துள்ளது. பாடல்கள், ஆக்ஷன், கேமரா,எடிட்டிங்,நடிகர்களின் சிறப்பான நடிப்பு, பிரஷாந்த் நீலின் கச்சிதமான இயக்கம் என அனைத்தும் இந்த படத்தில் சிறப்பாக இருக்க, இது வரை கன்னட சினிமா நினைத்து கூட பார்க்க முடியதா வசூலை படம் இந்திய முழுவதும் குவித்து வருகிறது.

யஷ்லாம் ஒரு ஹீரோவே இல்லை!!இவரையே நீங்க கொண்டாடுறீங்க!!!திடீரென போர்க்கொடி தூக்கிய கன்னட ரசிகர்கள். 1

குறிப்பாக ஹிந்தியில் மட்டும் 400 கோடிக்கு நெருங்கி வசூல் ஈட்டி முன்னணி ஹிந்தி நடிகர்களை காட்டிலும் பெரிய வசூல் நாயகனாக ஹிந்தியிலும் உருவெடுத்துள்ளார் யாஷ். படம் வெளியாகி 25 நாட்கள் முடிவடையும் நேரத்தில் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரமிக்க வைத்துள்ளது.

கன்னட திரையுலகின் மிக பெரிய நட்சத்திரமாக மாறியுள்ள யாஷ், இப்போது இந்திய முழுவதிலும் நிறைய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கன்னட திரை ரசிகர்கள் இப்பொது திடீரென இவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக ட்விட்டரில் “Stealingstaryash” என்ற ஹாஷ்டேக் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. விஷயம் என்னவென்று பார்த்தால், கன்னட திரையுலகில் தர்ஷன் என்கிற நடிகர் தான் அங்கு “பாக்ஸ் ஆபீஸ் மான்ஸ்டர்” என ரசிகர்களால் கொண்டாட பட்டு வருகிறார். வெளிமாநிலங்களில் பரிட்சயம் இல்லை என்றாலும் இவர் நம் ஊர் விஜய்,அஜித் அளவிற்கு அங்கு தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவராக இருந்து வருகிறார்.

படத்தின் 25வது நாள் ட்விட்டர் பதிவில் தயாரிப்பு நிறுவனமான ஓம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் யாஷை குறிப்பிட்டு “பாக்ஸ் ஆபீஸ் மான்ஸ்டர்” என குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தனர். இது தன இப்பொது அங்குள்ள ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்துள்ளது.

பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் குறித்தே ட்விட்டரில் பெரிதும் ஹாஷ்டகுகள் ட்ரெண்ட் ஆகும். இந்த நிகழ்விற்கு கன்னட ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க மிக பெரிய அளவில் மீமஸ்கள் போட்டும், ட்ரெண்ப்ட் செய்தும் வருகிறார்கள்.

பான் இந்திய படங்கள் தொடர்ந்து வர போவதில்லை, எப்போதும் ஒரு படத்தை வைத்து கொண்டு ஒருவரை கொண்டாடாதீர்கள் என கன்னட ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு கூறி வருகிறார்கள். இது குறித்து நடிகர்கள் தர்ஷனும்,யாஷும் இப்பொது வரியில் தங்களது கருத்துக்களை தெரிவிக்காமல் உள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்