
நடிகரும் மற்றும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த் வீட்டில் நடந்த நவராத்திரி கொலுவில் கலந்து கொண்டார்.கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் 9 நாட்கள் நவராத்திரி கொலு கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்த நவராத்திரி நாளில் குடும்ப பெண்கள் பலரும் விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்து வந்தனர் வந்தனர். சினிமா பிரபலங்களும் தங்களது வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடி வந்தனர் . அந்த வகையில், ரஜினிகாந்த் வீட்டில், கொலு கொண்டாடப்பட்டது.
இதில், ஐஸ்வர்யா, சவுந்தர்யா, லதா ரஜினிகாந்த், இயக்குநர் ஸ்ரீஹரியின் மனைவி பிரீத்தா, ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இவர்களது வரிசையில், நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸும் கொலு விழாவில் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் மற்றும் லதா உடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சனா 3 படம் திரையுலகில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா 4 படமும் உருவாக இருக்கிறது. இதற்கிடையில், பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் லக்ஷ்மி பாம் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேய் படங்களை உருவாக்கி ஹிட் கொடுப்பதில், ராகவா லாரன்ஸ் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதானால் தான் பாலிவுட் நடிகர் வைத்து திரைபடம் எடுத்து வருகிறார். ராகவா லாரன்ஸின் காஞ்சனா சீரிஸ் தொடர்ந்து கொண்டே போகிறது, அதற்கேற்ற வகையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.