லடாக் எல்லையில் போர் பதற்றம்!

லடாக் எல்லையில் போர் பதற்றம்! 1
இந்தியா-சீனா படை வீரர்கள்

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய படை வீரர்கள் ரோந்து செல்லும் போது, சீனா படையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருநாட்டு படைகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பாங்காங்க் ஏரியின் மூன்றில் இரண்டு பாகம் சீனாவின் வசம் உள்ளது. திபெத்தில் இருக்கும் லடாக் பகுதி வரை இந்த ஏரியின் ஒரு சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது லடாக் பகுதியின் ஒரு பாதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டு, லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக இந்தியா மீது சீனாவுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாட்டு சபையில் பாகிஸ்தானுக்கு ஆதவாக செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, சர்ச்சைக்குறிய லடாக் பகுதியின் பாங்கோங் ஏரி ரோந்து ரோந்து சென்ற இந்திய படைவீரர்களை திரும்ப போகுமாறு சீனா வீரர்கள் மிரட்டல் விட்டனர். ஆனால் இந்திய வீரர்கள் அங்கிருந்து நகர மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களுக்கும் சண்டை எழும் அபாயம் ஏற்பட்டது. இதன் பொருட்டு அவசரமாக கூட்டப்பட்ட இருதரப்பு பிரதிநிதிகள் குழுவில் ஏற்பட்ட சமாதானத்தின் மூலம் சண்டை நிறுத்திவைக்கப்பட்டது.

இது குறித்து, பிரபல செய்தி நிறுவனத்திற்கு இந்திய இராணுவ வட்டாரம் அளித்த பேட்டியில், “இருதரப்பு பிரதிநிதிகள் தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு எங்கே துவங்குகிறது என்பதில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. எப்போதெல்லாம் பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தனிப்பட்ட முறையில் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இரு தரப்புக்கும் சண்டை ஏற்பட்டத்தில், ஒருவருக்கொருவர் கட்டைகளாலும், கற்களை வீசியபடியும் மோதிக்கொண்டதும், அருணாச்சல பிரதேசத்தை தனது தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோரி அடிக்கடி பிரச்சனை எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்