Categories: உலகம்

லெபனான் அரசு வாட்ஸ்அப் வரியை ரத்து செய்தது!!

வெளியிட்டது
லெபனான் அரசு வாட்ஸ்அப் வரியை ரத்து செய்தது!! 1

லெபனான் நாட்டின் அரசு அந்நாட்டு மக்கள் பயன்படுத்தும் வாஸ்ட்அப், பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய செயலிகளுக்கு வரி விதிக்க முடிவு செய்து உள்ளது. ஆனால் மக்கள் கடுமையான போராடத்தை மேற்கொண்டதால் வரி விதிக்கும் முடிவை ரத்து செய்துள்ளது.

லெபனான் நாட்டில் கடந்த சில நாட்களாக பொருளாதாரம் சுருங்கி வருகிறதால் அந்நாட்டு மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம், வாட்ஸ்அப் ஆகிய செயலிகளிலைப் பயன்படுத்தப்பேசக்கூடிய அழைப்புகளுக்கு வரி விதித்தது. வாட்ஸ்அப் மற்றும் பிற பயன்பாடுகளின் மூலம் செய்யப்படும் குரல் அழைப்புகளுக்கு தினசரி $ 0.20 (£ 0.16) கட்டணம் வசூலிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதனை எதிர்த்து அந்நாட்டு மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். ஆதலால் அந்நாட்டு மக்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை எரித்ததோடு, பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதால் வியாழக்கிழமை அன்று 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த போராட்டம் லெபனானில் பல ஆண்டுகளாகக் காணப்படாத அளவுக்கு தீவிரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டு அரசு வரி விதித்ததை வாபஸ் வாங்கியுள்ளது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்