Categories: சினிமா

விக்ரம் தனது 58 வது படத்தில் கிரிக்கெட் வீரரை இணைக்க உள்ளரா??

வெளியிட்டது
விக்ரம் தனது 58 வது படத்தில் கிரிக்கெட் வீரரை இணைக்க உள்ளரா?? 1

விக்ரம் 58 படத்தில் இந்திய அணியின் சிறந்த நட்சத்திரப் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சவாலான வெவ்வேறு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் சீயான் விக்ரம். சமீபத்தில் இவர் நடிப்பில் கடாரம் கொண்டேன் திரைப்படம் வெளியானது.
அதைத்தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறாராம் விக்ரம். லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த படத்தில் விக்ரம் 10க்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி விக்ரம் 58வது படத்தில் இந்திய அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர்இர்ஃபான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு இர்ஃபான் ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் பெயரிடாத இப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

மேலும் இதில் இர்ஃபான் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ப்ரியா பவானி ஷங்கர் இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.முன்னதாக தமிழில் அனுராக் காஷ்யாப்பை வில்லனாக அஜய் ஞானமுத்து அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்