Categories: சமூகம்

விக்ரம் லேண்டரின்ஆயுள் இன்று முடிகிறது!

வெளியிட்டது
விக்ரம் லேண்டரின்ஆயுள் இன்று முடிகிறது! 1

சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவடைகிறது. மேலும் அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

செப்டம்பர் மாதம் கடந்த 7ம் தேதியன்று நிலவின் தென் துருவப்பகுதியில் லேண்டர் தரையிரங்கும் நேரத்தில் 2.1 கி. மீ தொலைவிலிருந்த போது அதனுடன் இருந்த தொடர்பை இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை இழந்துவிட்டது. அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள பல முயற்சிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் எடுத்தனர்.

மேலும் இந்த முயற்சியில் இஸ்ரோவுடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும் உதவியது. நாசாவின் ஜெட் புரபல்சன் லேபரட்டரி, விக்ரம் லேண்டருக்கு “ஹலோ” என்ற செய்தியை ரேடியோ சிக்னல்கள் மூலம் அனுப்பியது. ஆனால் அது பதில் அளிக்கவில்லை. ஆதலால் நாசா எல்.ஆர்.ஓ ஆர்பிட்டரை விக்ரம் லேண்டர் விழுந்து கிடந்த இடத்திற்கு மேலே வந்து அதனை கேமராவில் படம் எடுப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பியது. ஆனால் அந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா கூறியுள்ளது. ஆயினும் அது படங்களை எடுத்து அனுபினாலும் அது உபயோகப்படவில்லை.

ஏனென்றால் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலமான 14 நாள் இன்று முடிவடைகிறது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இந்த திட்டத்திற்குத்தன தங்களுடன் துணை நின்ற அனைத்து மக்களுக்கும் நன்றி கூறிய இஸ்ரோ விஞ்ஞானிகள்

உலகெங்குமுள்ள இந்தியர்களின் கனவுகளாலும், நம்பிக்கையினாலும் நாங்கள் உத்வேகம் பெற்று முன்னோக்கி நடைபோடுவதை தொடர்வோம். வானையே எப்போதும் நாங்கள் இலக்காக கொள்வோம்”

கூறியுள்ளனர்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்