Categories: உலகம்

விக்ரம் லேண்டர் சாய்ந்து விட்டது, உடையவில்லை – இஸ்ரோ தகவல்

வெளியிட்டது

விக்ரம் லேண்டர் உடையவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, அது சாய்ந்த நிலையில் உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் எனவும் ஆனால் இதுவரை எந்த தொடர்பும் இல்லை எனவும் அறிக்கை வெளியிட்டது. முன்னதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், சுற்று பாதையில் உள்ள ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பில் படம் பிடித்துள்ளது எனவும் சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான் விண்கலத்தில் 30 சென்டி மீட்டர் தெளிவு திறன் கொண்ட சிறந்த ஆர்பிட்டரில் உயர் தெளிவுத்திறன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அத்துடன் விக்ரம் லேண்டருடண் அடு்த்த 14 நாட்களில் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் குறிப்பிட்டார். சந்திரயான் 2 இரண்டு விஷயங்கள் உள்ளடக்கியது, ஒன்று அறிவியல் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் தொழில்நுட்பம் எனவும் கூறினார்.

விக்ரம் லேண்டர் சாய்ந்து விட்டது, உடையவில்லை - இஸ்ரோ தகவல் 1

இதற்கு முன்பு இந்தியா அனுப்பிய ஆர்பிட்டர்களிடமிருந்து இந்த ஆர்பிட்டர் வேறுபட்டு உ‌ள்ளதாகவு‌ம் இது அதிக செயல்திறனை உள்ளடக்கிய ஆர்பிட்டர் மேலும் அதிக அளவில் தகவல்களை தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று அதிகாலை 1.30 – 2.30 மணியளவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கபடும் என எதிர்பார்த்த நிலையில் நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டருடண் தொடர்பு இழைக்கப்பட்டது. இதனால் லேண்டர் பற்றி பல குழப்பங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. லேண்டருடண் தொடர்பு கொள்ள முடியுமா என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சந்திரயான் குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், இது மிகவும் நுட்பமான ஆராய்ச்சி எனவும் இதுவரை இந்தியா மேற்கொண்ட ஆராய்ச்சியியுடன் ஒப்பிடும் போது இது மிக பெரிய படிக்கல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜுலை மாதம் 22 ஆம் தேதியிலிருந்து சந்திரயான் ஏவப்பட்டதிலிருந்து இந்தியா மட்டும் அல்ல இந்த உலகமே இதன் முன்னேற்றத்தை கூர்ந்து கவனித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிலவின் ஒரு பகுதியை மட்டுமல்ல, மொத்த நிலவையும் ஆராய்வதற்கான நோக்கம் கொண்ட வித்தியாசமான திட்டம் என அறிவித்துள்ளது.

தெளிவான சுற்று வட்ட பாதையில் இயங்கும் ஆர்பிட்டர் நிலவில் ஏற்படும் மாற்றங்களையும், துருவங்களில் நீர் மற்றும் கனிம வளங்களை ஆராய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இத்திட்டம் 90-95% வெற்றி பெற்றதாக குறிபிட்ட பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்