
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிற முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் விரைவில் ஏரிகள் மேலும் நிரம்ப வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறத
35 அடி உடைய பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் வந்த நீர் வரத்தால் 7 அடி உயர்ந்துள்ளது. ஏரிக்கு 200 மில்லியன் கனஅடி நீர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது பூண்டி ஏரிக்கு 2000 கனஅடியும், புழல் ஏரிக்கு 315 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 347 கனஅடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது . கடந்த சில மாதங்களாக காய்ந்து கிடந்த மதுராந்தகம் ஏரிக்கும் நீர்வரத்து துவங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வருகிறது கன மழை இதனால் வெளி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரணம் ஏரியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.