Categories: சினிமா

படம் பாக்குறவன ஏமாத்தி இன்னும் எவ்வளவு நாள் காசு பாக்க போறீங்க? திட்டி தீர்த்த ப்ளூ சட்டை மாறன்.!

வெளியிட்டது

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் 1947 படம் பற்றி தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது, சுதந்திரம் கிடைப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஆங்கிலேய அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செங்காடு கிராமத்தில் உள்ள பருத்தி நல்ல வளம் மிக்கது. அதை தொடர்ந்து வரவைத்தால் நமக்கு மில்லியன் கணக்கான பணம் கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அதுதான் சுதந்திரம் கிடைக்கப்போகிறதே? பிறகு எப்படி பருத்தியை வரவைக்க முடியும் என்று சிலர் கேட்ட, சுதந்திரம் கிடைக்கும் போகும் விஷயத்தை அந்த கிராமத்தினரிடமும் சொல்லவே வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுக்கின்றனர். அந்த பருத்திக் குடோனை மேற்பார்வையிடும் வில்லனாகவும் அவரது பையனும் இந்த கிராமத்து மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மகன் பொம்பள பொறுக்கியாக இருக்கிறான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் பாக்குறவன ஏமாத்தி இன்னும் எவ்வளவு நாள் காசு பாக்க போறீங்க? திட்டி தீர்த்த ப்ளூ சட்டை மாறன்.! 1

சுதந்திரம் கிடைத்த செய்தியை தெரியாமல் ஒரு கிராமமே இருக்கும் போது அந்த படம் காமெடியாக இருக்கும் என்று எதிர்பார்த்து இந்த படத்திற்கு போனால் இவர்கள் அழுகாட்சி படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். எஸ்.ஜே சூர்யாக்கிய நியூ படத்தில் சில காட்சிகள் வரும், அது நம்பும் படியாக இல்லை என்றாலும் ரசிக்கும் படியாக இருந்தது. அதேபோல் சூப்பர் ஹீரோ மூவிக்களும் நம்பும் படியாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால் இந்த படம் சுத்தமாக கதையுடன் ஒன்றி போகவே முடியவில்லை. அந்த காலத்தில் பண்ணையார் படங்கள் எடுப்பார்கள். அதே படத்தை எடுத்து வைத்துக் கொண்டு, பண்ணையாருக்கு பதிலாக இங்கு வெள்ளைக்காரனை காட்டுகிறார்கள். முதல் பாதியில் ஒரு மணித்துளிகள் லேட்டாக வந்தால் கூட வெள்ளைக்காரன் அடி பிச்சு விடுவான். ஆனால் இரண்டாவது பகுதியில் எவனும் வேலை வெட்டிக்கு போகாமல் இருக்கிறான் இங்கு மாதம் ஒருமுறை பழைய நியூஸ் பேப்பர் வருகிறது. அதில் காந்தி ஆறடி உயரம் இருப்பார், பெரிய துப்பாக்கி வைத்திருக்கிறார், அதனால் தான் ஆங்கிலேயர் காந்தியை பார்த்து பயப்படுகிறான் என்று நியூஸ் பேப்பரை கிராமத்து மக்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். இதுபோல் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? என்று ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனங்களை கூறினார்.

பின்னர் ஒரு சின்ன கதை ஒன்றை கூறுகிறார். அதில் இரண்டாம் உலகப் போரின் போது எதிரி நாட்டுக்காரன் ஒருவன் ஒரு வீட்டில் தஞ்சம் கேட்கிறான். தினமும் ஒரு டாலர் பணம் கொடுத்து அந்த வீட்டில் தங்கிக்கொள்ள கேட்கிறான். இவனும் அதை அனுமதிக்கிறான். பின்னர் மனசாட்சி உருத்தி சர்ச்சில் சென்று ஃபாதரிடம் மன்னிப்பு கேட்டபோது, இந்த விஷயத்தை கூறுகிறான். ஃபாதரும் நீ நல்ல வேலை தான் பண்ணியிருக்கிறாய் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறாய் என்று கூற, அதற்கு இரண்டாம் உலகப்போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்கிற விஷயத்தையும் அவனிடம் கூறவா? என்று அந்த மனிதர் கேட்கிறார். அது போல தான் நம்மை படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் இத்தனை காலமாக ஏமாற்றி காசு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சனத்தை கூறினார்.! அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்