
ரஜினியின் 168-வது படத்தை முதல் கட்டமாக பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு கிராமத்தில் நடப்பது போன்ற பாணியில் அதன் பின்னணியில் விவசாய கதையை மய்யமாக கொண்டு படமாக தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.தமிழ் திரையுலகில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் மீனாவும், குஷ்புவும் நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தற்போது ரஜினி படத்தில் நடிக்கவும் தேர்வாகி உள்ளார். நகைச்சுவை வேடத்தில் சூரி வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் தர்பார் படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். இதனையடுத்து தயாராகும் ரஜினி புதிய படத்தில் என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்று அறிவதில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் பெரிதளவில் எழுந்துள்ளது.
இந்நிலையில், புதிய படத்தில் ரஜினி 2 பெண்டாட்டிக்காரர் வேடத்தில் நடிப்பதாகவும் அவரது மனைவிகளாக குஷ்பு, மீனா நடிப்பதாகவும் இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது.ஏற்கனவே சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 25 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த வீரா படத்தில் 2 பெண்டாட்டிக்காரராக நடித்து இருந்தார். மனைவிகளாக மீனா, ரோஜா நடித்து இருந்தனர். ஆனாலும் இதனை படக் குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.