வேளாண் உதவி தொகை நிதியில் 20% குறைப்பு!

மத்திய அரசின் பிரதம மந்திரி கிஸான் யோஜனா திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் 20 சதவிகிதம் குறைத்துக் கொள்ளுமாறு மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேளாண் உதவி தொகை நிதியில் 20% குறைப்பு! 1

இந்தியாவின் பொருளாதாரத்தில் சுமார் 18 சதவிகிதம் அளவிற்கு வேளாண் துறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வரும் வேளாண் வாசிகள் பெரும் இழப்பினை சந்தித்து வருகிறார்கள்.

காலநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் போதிய வருமானம் ஈட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். குறிப்பாக குறு நில வேளாண் வாசிகளின் பொருளாதார வாழ்வு கேள்வி குறியாகி வருகிறது.

இதனை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசின் பிரதம மந்திரி கிஸான் யோஜனா திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம்ஆண்டு ஒன்றுக்கு ஏழை வேளாண் வாசிகளுக்கு ரூ.6000 வழங்கப்பட்டது.

இதற்காக மத்திய அரசின் நிதியிலிருந்து சுமார் ரூ.75000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 9.5 கோடி வேளாண் வாசிகள் இணைக்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் மாநில அரசுகளில் உள்ள குளறுபடிகள் மற்றும் ஆதாரில் உள்ள சிக்கல் போன்ற காரணங்களால் 7.5 கோடி விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது 2019-20ஆம் நிதியாண்டில் வேளாண்மைத் துறை வெறும் 44,000 கோடி ரூபாய் அளவிலான நிதி மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்காக ஒதுக்கப்படும் நிதியில் 20 சதவிகிதத்தை குறைத்துக் கொள்ளுமாறு மத்திய வேளாண் அமைச்சகம் நிதி துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்