Categories: கல்வி

2020 ஆண்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மத்திய அரசு! SSC தேர்வின் அட்டவணை வெளியீடு!!

வெளியிட்டது
2020 ஆண்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மத்திய அரசு! SSC தேர்வின் அட்டவணை வெளியீடு!! 1

2019 அக்டோபர் முதல் 2021 மார்ச் வரையிலான எஸ்.எஸ்.சி தேர்வுகளின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையிலான தேர்வுகள் மற்றும் கால அட்டவணை வெளியிட்டிருக்கிறது . இதில் மல்டி டாஸ்கிங், பட்டப்படிப்பு அளவிலான தேர்வுகள், பிளஸ் டூ தகுதி அளவிலான தேர்வுகள் என பல தேர்வுகள் உள்ளது.மத்திய அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், தேர்வுகளை நடத்தி பணியிடங்களை நிரப்பி வருகிறது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் போல், மத்திய அரசு வேலைக்கு எஸ்.எஸ்.சி இன்றியமையாதது ஆகும். எஸ்.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றால், உடனடியாக மத்திய அரசு வேலை கிடைக்கும். அதுவும் தமிழகத்தில் பணியிடத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், சொந்த ஊரிலே மத்திய அரசு வேலை செய்யவும் வாய்ப்புகளும் உள்ளது.

அந்த வகையில், தற்போது அடுத்தடுத்து வரும் மாதங்களில் என்னென்ன எஸ்.எஸ்.சி தேர்வுகள் உள்ளது, எப்போது நடைபெற உள்ளது, என்பது பற்றி உத்தேச தேர்வு கால அட்டவணை வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 26 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என்று கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மல்டி டாஸ்கிங் பணிக்கான தேர்வுகள், மொழி பெயர்ப்பாளர், ஜூனியர் இன்ஜினியர், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதிக்கான தேர்வு, ஒருங்கிணைந்த பிளஸ் டூ படிப்பு தகுதிக்கான தேர்வு, தட்டச்சர், சுருக்கெழுத்தர் , டெல்லி போலீஸ் வேலை, சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு போன்ற பல்வேறு விதமான தேர்வுகள் உள்ளது.
இந்த தேர்வுகளுக்கு தற்போதிலிருந்து தயார் செய்தால் கூட போதும், மேற்கண்ட பணிகளில் ஒன்றை வென்று விடலாம். தேர்வு பாடத்திட்டமும் எஸ்.எஸ்.சி வழங்கியுள்ளது. எனவே, முழு மூச்சாக பாடத்திட்டத்தை படித்து தயார் செய்யும்பட்சத்தில், மத்திய அரசு வேலை எளிதாக கிடைத்து விடும்.

தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/calender2019_25012019.pdf

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்