
கடலூர் அருகே அழகப்பா நகர், ராமலிங்கம்நகர், தானம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 26 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீராணம் ஏரியில் இருந்து சுமார் 4,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 228 ஏரிகளில் 39 ஏரிகள் 90% கொள்ளளவை எட்டியுள்ளது.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, சுப்பிரமணியபுரம்,விஜயபுரம்,ராஜேந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் அங்கும் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.