2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ் மக்கள்.!

2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ் மக்கள்.! 1

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்ட கீழடி அகழாய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட கீழடியில் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த பொருட்கள், கட்டுமானங்கள், தடயங்கள் ஆகியவை தமிழ் மற்றும் தமிழர்களின் நாகரிகத்தையும் சமுதாயத்தையும் சுட்டிக்காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. “கீீீீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்” என்ற புத்தகத்தை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் வெளியிட்டார்.

விளம்பரம்

கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழர்களின பண்பாடு 2,600 ஆண்டுகள் பழமையானது என்பது கண்டறியப்பட்டது. நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த மாதிரிகளில் 353 செ.மீ ஆழத்தில் இருக்கும் கரிமங்கள் கி.மு.580 காலத்தை என்று தெரியவந்துள்ளது. எனவே கி.மு. 6ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ம் நூற்றாண்டு வரை கீழடி வளமான பண்பாட்டைக் கொண்ட பகுதியாக விளங்கியிருக்கலாம் என்ற உணர்த்துகிறது.

தொடர்புடையவை  வெங்காயத்தின் விலை உயர்வு! ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி!!

கி. மு. 3ம் நூற்றாண்டில் தான் தமிழகத்தில் நகர்மயமாதல் தொடங்கப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் கி. மு. 6ம் நூற்றாண்டிலிருந்தே வைகை ஆற்றினைச் சுற்றி நகரம் உருவாக ஆரம்பித்தது என்று சான்றுகள் கூறுகின்றன. மேலும் வரலாற்றுச் சான்றுகளின்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கங்கை சமவெளிப் பகுதியிலும் இதே காலகட்டத்தில்தான் நகரம் உருவாக தொடங்கியது.

விளம்பரம்

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல் ரீதியான கலக்கணிப்புகள், தமிழ்-பிராமியின் காலம் மேலும் நூறாண்டுகள் பழமையானதாக கருதச் செய்கிறது. இவையெல்லாம், கி.மு. 6-ம் நூற்றாண்டில் இருந்த தமிழ்ச் சமுதாயம், எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கிறது. அதாவது 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதைக் சுட்டிக்காட்டி மெய்சிலிர்க்கச் செய்கிறது.

விளம்பரம்

Leave a Comment