“ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…..ரஜினி வெளியிட்ட டீஸர்”

வெளியிட்டது

"ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.....ரஜினி வெளியிட்ட டீஸர்" 1

உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற செஸ் விளையாட்டு போட்டி என்றால் அது செஸ் ஒலிம்பியாட் போட்டியே. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் இதில் கலந்து கோலா எப்போதும் முனைப்புடனும் ஆர்வமுடனும் செயல்பட்டு வருவார்கள். முதல் முறை இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை 28ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் இந்த போட்டி மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பான ஆயுத்த பணிகளில் தமிழக அரசு தீவிர முனைப்புடன் இறங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2020ஆம் நடவிருந்த போட்டி ரத்தனத்தால் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த போட்டி இப்பொது நடைபெறவுள்ளது. செஸ் விளையாட்டு வீரர்கள் மிகவும் கௌரவமாக பார்க்கும் இந்த விளையாட்டை மிக சிறப்பான முறையில் நடத்தி முடிக்க பல்வேறு வகையிலும் தமிழகஅரசு செயல்ப்பட்டு வருகிறது.

இந்திய செஸ் மேதை திரு. விஸ்வநாத் ஆனந்த் தலைமையில் இந்திய முழுவதிலும் இந்த போட்டிக்கான ஜோதி சுற்றி வந்து கொண்டிருக்குகின்றன. வருகிற ஜூலை 28ஆம் தேதி மிக பெரிய அளவில் ஒப்பனிங் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை இயக்கி கொடுக்க பிரபல இயக்குனர் விக்னேஷ்  ஒப்பந்தமாகி உள்ளார்.

அதற்கான ஒரு அறிமுக டீஸர் “வருக வருக” என பாடலுடன், “Welcome to Chennai” என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் தோன்றும் அந்த 40 செகண்ட் டீஸர் காட்சியை நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இப்பொது கொரோனா பதிப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலின் விரைவில் உடல்நலம் தேறி இந்த போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்பர் என தெரிகிறது. அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy – News 18 tamilnadu.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்