Categories: அரசியல்

48 சிறுபான்மை உறுப்பினர்கள் பாஜகவிலிருந்து விலகல்!

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றில் எழுந்த உள்கட்சி பூசலால் மத்தியபிரதேசம் மாநில பாஜகவிலிருந்து 48 நிர்வாகிகள் விளக்கியுள்ளனர்.

சமீபத்தில் இயற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு மாநிலங்கள் தொடங்கி, அனைத்து மாநிலங்களுக்கும் பரவி இருக்கின்ற இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

48 சிறுபான்மை உறுப்பினர்கள் பாஜகவிலிருந்து விலகல்! 1
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள்.

இப்போராட்டத்தை கட்டுப்படுத்த பாஜக அரசு கடுமையான முறைகளை கையாண்டு வருகிறது. மங்களூர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், சிறுபான்மை மக்களை காவல் துறையின் உதவியோடு அச்சுறுத்தி வருகிறது யோகி ஆதித்தியநாத் அரசு.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுபான்மை இனத்தை சார்ந்த 48 பேர் பாஜக கட்சியிலிருந்து விளக்கியுள்ளனர். கட்சிக்குள் பாகுபாடு காட்டப்படுவதாகவும், கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக மோசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாஜகவிலிருந்து விளக்கியுள்ள உறுப்பினர்கள், மாநில சிறுபான்மைத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சியாமா பிரசாத் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி பாகுபாடுகள் காட்டாமல் அணைத்து சிறுபான்மை மக்களையும் ஒருங்கிணைத்தது. ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை என தெரிவித்த்துள்ளனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்