50 லட்சம் லஞ்சம் பெற்று கொண்டு சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியதாக கூறி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளது சி.பி.ஐ

வெளியிட்டது

நேற்று காலை  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீட்டில்  சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது. இதில் கிட்டத்தட்ட 250 சீனாவை சேர்ந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி விசா அனுமதி அளித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐயால் கைது செய்யபட்டுள்ளார்.

சென்னை,டெல்லி என 10ற்கும் மேற்பட்ட சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ இந்த விவரத்தை தெரிவித்துள்ளது.

50 லட்சம் லஞ்சம் பெற்று கொண்டு சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியதாக கூறி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளது சி.பி.ஐ 1

சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது நடந்த தாள்வாண்டி சபோ மின் திட்டத்தில் வேலைக்கு இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.   2010 முதல் 2014 ஆண்டு வரை நடைபெற்ற இந்த கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து 2011ஆம் ஆண்டே இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. வழக்கு முடித்து வைக்கப்பட்டு 10 வருடங்கள் ஆன பிறகு மீண்டும் இதில் முன்னாள் லோக் சபா உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

FIPB அனுமதி காரணமாக ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீட்டில்  சி.பி.ஐ. ரெய்டு நடந்தி இருந்தது. அப்போது கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிறுது காலத்தில் ஃபைலில் வெளிவந்தார்.

இந்த  சி.பி.ஐ. ரெய்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் போது செயலாளர் ரந்தீப் சிங்க் சுரஜீவாலா கட்டமாக தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “சிதம்பரம் தேச பற்று மிக்கவர், இந்த நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காவவும் அயராது உழைப்பவர், தொடர்ந்து அவர் மீது இவர் பொய் வழக்கு சுமத்தி வருவது கண்டனத்துக்குரியது” என பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்